பாலியல் புகார் எதிரொலி;சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தமிழக முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி அரசியல் சுற்றுப்பயணம் மற்றும் நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறார். அந்த வகையில் கடந்த ஞாயிறுகிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறை சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் முதல்வருடன் சென்றார்.

பாதுகாப்பு பணிகள் முடிந்து சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்காக கிளம்பிய போது, அந்தந்த மாவட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் அவரை வரவேற்று உபசரித்து அனுப்பினர்.
இந்த நிலையில், மற்றொரு மாவட்டத்தின் வழியாக வந்தபொழுது அந்த மாவட்டத்தின் எஸ்.பி ஆக இருக்கக் கூடிய பெண் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸை வரவேற்று உபசரித்தார்.

அப்போது ,பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை தனது காரில் ஏற்றிய சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், பெண் ஐ.பி.எஸ் அதிகாரியிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். இதனால் பதற்றமடைந்த பெண் அதிகாரி உடனே காரை விட்டு இறங்கி சென்றுள்ளார். இந்த நிலையில் தனக்கு பாலியல்  தொல்லை கொடுத்த சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி டி.ஜி.பி திரிபாதி மற்றும் உள்துறை செயலாளரிடம் புகார் அளித்தார்.

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து புகாருக்கு உள்ளான சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் விவகாரம் வெளியே தெரியவர, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கக்கோரி, அறிக்கை வெளியிட்டார்.

இந்த விவகாரமானது காவல்துறை மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் பெறும் சர்ச்சையாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில், இந்த வழக்கை விசாரிப்பதற்காக கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநாதன் ஐ.ஏ.எஸ் தலைமையிலான ஆறு பேர் அடங்கிய குழுவை தமிழக அரசு இன்று மாலை உருவாக்கியது.

இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு  ஐஜி ஒருவர் பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் விசாகா கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு அதன் விசாரணை நிலுவையில் இருந்து வரும் நிலையில் மீண்டும் பெண் ஐ.பி.எஸ்  ஒருவர் புகார் அளித்துள்ளதும், பாலியல் குற்றசாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…