சென்னைவாசிகளே ஜாக்கிரதை!

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு முதல் கரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியது. இதையடுத்து, கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் நாளொன்றுக்கு 2,000-த்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

மாநகராட்சியின் தொடர் மருத்துவ முகாம்கள் மற்றும் மருத்துவப் பரிசோதனை காரணமாக நோய்த் தொற்று படிப்படியாக குறைந்து கடந்த ஜனவரி மாதம் நாளொன்றுக்கு 500-க்கும் குறைவானவர்கள் கண்டறியப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது நோய்த் தொற்று மேலும் குறைந்து நாளொன்றுக்கு 150-க்கும் குறைவானவர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் 2 லட்சத்து 34,837 பேர் இதுவரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 2 லட்சத்து 28,942 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவால் இதுவரை 4,145 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போது குறைந்து 15 மண்டலங்களில் 1,500 பேர் என்ற அளவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் இருந்தனர்.

எனினும், சில வாரங்களுக்கு முன்பு வரை 1500 என்ற அளவில் இருந்த கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, இன்று 1750 என்ற அளவுக்கு சப்தமில்லாமல் உயர்ந்து வருகிறது.

அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 185 பேரும், தேனாம்பேட்டையில் 152 பேரும், அம்பத்தூரில் 168 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…