இன்று முதல் சென்னை புத்தக கண்காட்சி

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நந்தனம் ஒய்என்சிஏ மைதானத்தில் இன்
று தொடங்கும் 44 ஆவது ’சென்னை புத்தக் கண்காட்சி’ மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெற்ற உள்ளது.

காலை 9 மணிக்கு நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் தனி அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த கண்காட்சியின் போது, சிறந்த புத்தகங்களை ட்விட்டர் வழியாக பரிந்துரைக்கவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

கண்காட்சியில் இந்த ஆண்டு ‘ரேக்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சிறிய எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களைக் காட்சிப்படுத்தலாம்.

தினமும் காலை 11 மணி முதல் 8 மணி வரை வாசகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *