பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு!
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, துரைமுருகன் பேச அனுமதி வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அமளிக்கிடையே ஓ. பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட் உரையைத் தொடங்கியதை அடுத்து, திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.