தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக அருண் மிஸ்ரா நியமனம் – சர்வதே அரங்கில் இந்தியாவிற்குத் தலைக்குனிவு

தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக அருண் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் எதிர்ப்பைப் புறந்தள்ளி விட்டு, அருண் மிஸ்ரா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அருண் மிஸ்ரா தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நாளினை அந்த ஆணையத்திற்கு சவக்குழி வெட்டப்பட்ட நாளாக கருதுகிறேன்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் மனிதஉரிமை மீறல் தொடர்பான வழக்குகளில் அரசு சார்பாக தீர்ப்பளிப்பதையே வழமையாகக் கொண்டிருந்தவர் அருண் மிஸ்ரா.

வன உரிமைச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு விசாரணையின் போது வனப்பகுதியில் வாழும் ஏழை மக்களை வெளியேற்ற இவர் அளித்த உத்தரவு கடும் எதிர்ப்பை கிளப்பியது.

அமித்ஷா தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்த வழக்கை இவரது தலைமையிலான அமர்வு விசாரிக்க அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பணித்ததைக் கண்டித்து தான் கடந்த ஜனவரி 2019ல் நீதியரசர்கள் ரஞ்சன் கோகாய், செல்லமேஸ்வரர், மதன் லோகூர் மற்றும் ஜோசப் குரியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் எப்போதுமே மோடி அரசுக்கு ஆதரவாக அல்லது அதன் முக்கிய தலைவர்களுக்கு ஆதரவாகவே அருண் மிஸ்ரா தீர்ப்பளித்துள்ளார்.

சஹாரா பிர்லா ஊழல் வழக்கு, சஞ்சீவ் பட் வழக்கு. ஹரன் பாண்டே வழக்கு. சிபிஐ உள்விவகார வழக்கு முதலியவை இந்த வழக்குகளில் அடங்கும்.

ஐ.நா.மனித உரிமை ஆணயத்தினால் அமைக்கப்பட்ட தேசிய மனித உரிமை நிறுவனங்களின் பன்னாட்டு கூட்டமைப்பு
தேசிய மனித உரிமை ஆணையங்களின் செயற்பாடுகள் குறித்து வகுத்துள்ள பாரிஸ் கோட்பாடுகளுக்கு முரணாக அருண் மிஸ்ராவின் நியமனம் அமைந்துள்ளது.

இது வரை தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக ஒய்வுப் பெற்ற உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளே நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். 2019ல் மோடி அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தலைமை நீதிபதி அல்லாத அருண் மிஸ்ரா மனிதஉரிமை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருப்பது இவருக்காவே இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.

அருண் மிஸ்ராவை விட அனுபவம் வாய்ந்த தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் தற்போதைய உறுப்பினரான நீதியரசர் பி.சி. பந்த் ஏன் தலைவராக நியமிக்கப்படவில்லை. அல்லது உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பானுமதி மற்றும் இந்து மல்கோத்ராவின் பெயர்கள் ஏன் பரிசீலிக்கப்படவில்லை.

தேசிய மனிதஉரிமை ஆணையத்திற்கு ‘ஏ’ தகுதி 2017ல் வழங்கப்பட்ட போது மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்வோம் என்று இந்தியாவின் சார்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

ஜனவரி 2020ல் 24 நாடுகள் பங்கு கொண்ட பன்னாட்டு நீதித்துறை மாநாட்டில் பிரதமர் மோடி முன்னிலையில் அப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த நிலையில் உரையாற்றிய அருண் மிஸ்ரா பிரதமர் மோடி உலகம் போற்றும் தூரப்பார்வையுடைய ஆளுமை என்றும் அவர் துடிப்புமிக்க பேரறிவாளர் என்றும் அவர் சர்வதேச அளவில் சிந்தித்து உள்நாட்டில் செயல்படுத்துபவர் என்றும் புகழ்ந்தார். இந்த புகழ்மாலைக்காக மரபுகளை மீறி அரசு சார்பு ஒன்றை மட்டுமே இலட்சியமாக கொண்டிருக்கும் ஒருவருக்கு தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் பதவி அளித்திருப்பது சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் நலனை கவனத்தில் கொண்டு குடியரசு தலைவர் அருண் மிஸ்ராவை தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Drupathi

“உலகமே இந்தியாவை எதிர்நோக்கியுள்ளது” – குடியரசுத் தலைவர் உரை!

குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. நாடாளுமன்றத்தில்…

துரோகம் என்பது அவர்களது மரபணுவில் உள்ளது எடப்பாடி அணியை வச்சு செய்த பி.வி.கே.பிரபு

துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் துரோகம் என்பது அவர்களது மரபணுவிலே…

போக்குவரத்து பெண் தலைமை காவலரை கன்னத்தில் அறைந்த அதிமுக வழக்கறிஞர் அராஜகம்…!

சிவகாசியில் போக்குவரத்து பெண் தலைமை காவலரை கன்னத்தில் அறைந்த அதிமுக வழக்கறிஞர் கைது!சிவகாசி…

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளே இல்லை… தேவையும் இல்லை… சுப. வீரபாண்டியன் நறுக்

தமிழ்நாட்டில் மக்களை மதத்தால் பிரிக்கும் சூழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மீஞ்சூரில் திருவள்ளுவர் சிலை…