விவசாயிகளுக்கு திராவிடர் கழகம் என்றும் துணை நிற்கும் – கி. வீரமணி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு என்றும் திராவிடர் கழகத்தின் ஆதரவு இருக்கும் என அதன் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ‘முறையற்ற முறையில் நிறைவேற்றப்பட்ட, விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கறுப்புச் சட்டங்களான மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு திரும்பப் பெறும் வரை போராடுவோம் என்ற உணர்வோடு, கடந்த 6 மாதங்களுக்கு மேல் தலைநகர்

டில்லியின் எல்லையில் கொளுத்தும் வெயில், கொட்டும் குளிர், கொடும்பனி, மழை என்று பாராமல் கொள்கை உறுதியோடு போராடும் விவசாயப் பெருங்குடி மக்கள் வரலாறு காணாத வகையில் நடத்தும் அறப்போரையும், அவர்களது அந்த நியாயமான மக்களாட்சி உரிமையையும் ஆதரிக்கும் வகையில் நாளை (26.05.2021) நடைபெறவிருக்கும் நாடு தழுவிய ஆதரவு போராட்டத்திற்கு திராவிடர் கழகம் அதன் ஆதரவினை நல்குகிறது.
விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்போம்’ என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *