இந்தியா தோல்வியடைந்ததால் ரசிகர் மாரடைப்பால் பலி
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததால் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் நேற்று நடந்த கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கேற்ப பல இடங்களில் டிஜிட்டல் திரைகள் வைத்து ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில் திருப்பதி ரூரல் மண்டலம் துர்க சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ஜோதிஷ்குமார் யாதவ் (35) பெங்களூரில் சாப்ட்வேர் பொறியாளராக பணி புரிந்து வருகிறார். இவர் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் துர்க சமுத்திரம் கிராமத்திற்கு வந்திருந்தார். இந்நிலையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்தியா தோல்வியடைந்ததால் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை திருப்பதி ரூயா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் வழியிலேயே உயிரிழந்தார்.