ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு; சேப்பாக்கத்தில் மோத உள்ள அணிகள் எவை?
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தொடங்க உள்ளது. அக்டோபர் ஐந்தாம் தேதி நடைபெற உள்ள ஐ.சி.சி.ஐம்பது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. தரவரிசை அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் ஆஸ்திரேலியா இங்கிலாந்து நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் தகுதி பெற்றனர்.
ஜிம்பாவே, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட அணியில் தற்போது தகுதி சுற்று போட்டியை விளையாடி வருகின்றனர். அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா ஆஸ்திரேலியா பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன அரை இறுதிப் போட்டிகள் கொல்கத்தா மும்பையிலும் இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் அக்டோபர் 8ம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா அணியும், அக்டோபர் 14ஆம் தேதி நியூசிலாந்து – பங்களாதேஷ் அணியும், அக்டோபர் 18ஆம் தேதி நியூசிலாந்து – ஆப்கானிஸ்தான் அணியும், அக்டோபர் 23ஆம் தேதி பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணியும், அக்டோபர் 27 பாகிஸ்தான்-சவுத் ஆப்பிரிக்கா அணியும் மோத உள்ளன.