ஐபிஎல் டிக்கெட் வேணுமா? ஐபிஎல் டிக்கெட்… ஆன்லைன்னில் ஆட்டயப்போட்ட மோசடி கும்பல்…!

சென்னையில் ஐபிஎல் டிக்கெட் வாங்கித் தருவதாக கூறி ஆன்லைனில் மோசடி செய்த நபர் மீது புகார், கடந்த ஆறாம் தேதி சிஎஸ்கே சென்னை எம் ஐ மும்பை இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண சென்னை ராயப்பேட்டைவில் உள்ள ஏபி அகாடமி நிறுவனத்தை நடத்தி வரும் அருண்குமார் என்பவர் தனது நிறுவனத்தில் பயின்று வரும் மாணவர்களை ஐபிஎல் கிரிக்கெட்டை நேரில் பார்ப்பதற்கு அழைத்துச் செல்வதாக கூறி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நீரில் டிக்கெட் வாங்க சென்ற பொழுது அதில் டிக்கெட் அவருக்கு கிடைக்கவில்லை என்பதால்,
இணையதளம் மூலம் வரும் விளம்பரங்களை வைத்து டிக்கெட்டை வாங்க முயற்சி செய்துள்ளார், இணையதளத்தில் நான்காயிரம் ரூபாய்க்கு ஐபிஎல் டிக்கெட் உள்ளதாக வந்த குறுஞ்செய்தியை வைத்து அவர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன் தொகையாக 5000 ரூபாய் செலுத்தியதாகவும், சரியாக ஆறாம் தேதி காலையில் அவர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என கூறியுள்ளனர், பின்பு அருண்குமார் தனது பணத்தை திரும்ப செலுத்தும் படி கேட்டுள்ளார், பணத்தைப் பெற்ற அவர்கள் மீண்டும் பணத்தை அருண்குமார்ருகு பணத்தை திரும்ப செலுத்தி உள்ளனர்,
இந்த நிலையில் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் என்ற பெயருடன் விளம்பரத்தை பார்த்து அதில் ஐபிஎல் டிக்கெட் உள்ளதாக குறிப்பிட்டுள்ளதை பார்த்து தொடர்பு கொண்டார் அப்பொழுது அவர்களிடம் பொது டிக்கட் உள்ளதாகவும் உடனடியாக பணம் செலுத்தினால் தங்களுக்கு டிக்கெட் அனுப்புவதாக கூறியுள்ளனர், பணம் செலுத்திய பின்பு அவர் டிக்கெட்டை கேட்டு பொழுது சரியான பதிலை அளிக்காமல் அவர்கள் அருண்குமாரின் அழைப்பை ஏற்காமல் இருந்துள்ளனர்,
இதனிடையில் இவர்கள் ஏமாற்றப்படுவதை தெரிந்து கொண்டு அருண்குமார் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்து உள்ளார், பரிந்துரை செய்து ஏமாற்றிய நபர் யார் என்று கண்டறிந்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்,
ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் போட்டி நடைபெறும் பொழுது மொத்த மாநிலங்களில் கடைபிடிக்கும் விதிமுறைகளை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் உள்ள நிர்வாகிகள் கடைபிடித்தால் இது மூன்று டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பதை தடுக்கலாம் அதன் மூலம் மக்கள் ஏமாறுவதையும் தடுக்கலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்,