கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்; கண்ணீரில் மூழ்கிய ரசிகர்கள்!

பிரேசில் கால்பந்து ஜாம்பவானும் மற்றும் மூன்று முறை உலகக் கோப்பை வென்றவருமான பீலே, தனது 82வது வயதில் காலமானார்.

குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பீலேவிற்கு கடந்த 2021ம் ஆண்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அன்றிலிருந்து புற்றுநோயுடன் போராடி வந்த பீலே, கடந்த நவம்பர் மாதம் பல்வேறு உடல் நலக்குறைபாடுகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சாவ் பாலோவில் உள்ள ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலே நேற்றிரவு மரணமடைந்த சம்பவம் கால்பந்தாட்ட ரசிகர்களை கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது.

பீலே அக்டோபர் 23, 1940 அன்று பிரேசிலில் உள்ள ட்ரெஸ் கொராகோஸ் என்ற சிறிய நகரத்தில் பிறந்தார். தந்தையிடம் கால்பந்து விளையாட்டை கற்றுக்கொண்ட இவர், அதன் மூலமாக தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக உருவெடுத்தார். கால்பந்தாட்டத்தின் சூப்பர் ஸ்டாரான பீலே 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது பிரமிக்க வைக்கும் விளையாட்டால் ரசிகர்களை கவர்ந்தார். 1958, 1962 மற்றும் 1970 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை FIFA உலகக் கோப்பையை வென்ற ஒரே வீரர் பீலே ஆவார்.

பீலே 1958 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் மூலம் 17 வயது இளைஞனாக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். இவர் தலைமையில் 1970களில் உலகிலேயே மிகவும் ஆக்ரோஷமான, வெற்றிகரமான அணியாக பிரேசில் அணி திகழ்ந்தது.

பீலேவின் மரணம் கால்பந்து பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கால்பந்து வீரனுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இறுதிப் பிரியாவிடை அளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பாஜகவை புறக்கணிக்கும் அதிமுக… சின்னம், வேட்புமனு என எதிலும் சேர்க்காத எடப்பாடி  

அதிமுக.விற்கு ஆதரவளிப்பதாக பாஜக அறிவித்த போதிலும், பாஜகவை புறக்கணிக்கும் எடப்பாடி அணி. பணிமனையில்…

இடைத்தேர்தல்லாம் சரிவராது… ‘தமிழைத் தேடி’ பயணமே போதும் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி

தமிழகத்தில்இனி வரும் எந்த இடைத்தேர்தலிலும் பாமக போட்டியிடாது பாமக கௌரவத் தலைவர் ஜி…