அசானி புயல் காரணமாக சென்னையில் 10 விமான சேவைகள் ரத்து!!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடலில் உருவாகியிருக்கும் அசானி புயலாம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அசானி புயல் கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அக்னி நட்சத்திரத்தை ஆப் செய்யும் விதமாக அமைந்துள்ளது.
இதனிடையே தற்போது அசானி புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று 10 விமான சேவைகள் தடை என விமான நிலைய இயக்குனரகம் அறிவித்து உள்ளது.
அந்த வகையில் விசாகப்பட்டினம், ஹைதராபாத், மும்பை, ஜெய்ப்பூா் போன்ற பகுதிகளுக்கு விமான சேவைக்கு தடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அசானி புயலால் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.