கேரளா ப்ளாஸ்டர்ஸ் அபார வெற்றி – புள்ளி பட்டியலில் முன்னேற்றம்

Kerala Blasters Second Place

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி சீசன் 8 -ன் நேற்றைய ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் 3-வது இடத்தில் இருந்த கேரளா ப்ளாஸ்டர்ஸ் அணியும் கடைசியில் உள்ள நார்த் ஈஸ்ட் அணியும் மோதினர் .தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கேரளா பிளாஸ்டர் அணியானது 2 – 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த சீசன் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கேரளா பிளாஸ்டர் அணியானது இதுவரை, விளையாடிய 12 ஆட்டங்களில் 4 வெற்றி 5 டிரா மற்றும் 2 தோல்விகளை சந்தித்துள்ளது.நார்த் ஈஸ்ட் அணியானது இதுவரை விளையாடிய 15 ஆட்டங்களில் 2 வெற்றி 4 டிரா 9 தோல்விகள் சந்தித்துள்ளது.

கேரளா பிளாஸ்டர் அணியானது 4-4-2 ஃபார்மேஷனிலும் நார்த் ஈஸ்ட் அணியானது 4-3-3 என்ற ஃபார்மேஷனிலும் விளையாடியது.தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இரு அணிகளும் கடுமையாக முயற்சித்த போதும் இரு அணிகளாலும் கோல் எதும் அடிக்க முடியவில்லை.

இரண்டாம் பாதியின் 62 நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வீரர் ஜோர்ஜ் பெரேரா ஒரு கோல் அடித்தார்.பின்னர் கேரளா பிளாஸ்டர் அணி வீரர் ஆயுஷ் இரண்டு மஞ்சள் அட்டைகள் வாங்கியதால் ஆட்டத்தின் 70 நிமிடத்தில் வெளியேற்றப்பட்டார்.இதனால் மீதமுள்ள ஆட்ட நேரம் முழுவதும் 10 வீரர்கள் கொண்டு விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். பின்னர் ஆல்வரொ 82 நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். பின்னர் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் 96 நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணி வீரர் முகமது ஒரு கோல் அடித்தார்.இதன் மூலம் 2 – 1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…