சம நிலையில் முடிந்த கால்பந்து ஆட்டம்!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி சீசன் 8 -ன் நேற்றைய ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் 6 -வது இடத்தில் உள்ள மும்பை சிட்டி மற்றும் 5 -வது இடத்தில் உள்ள எ.டி .கே மோகன் பாகன் அணியும் மோதினர். இரு அணிகளும் சம பலத்துடன் மோதிய இந்த ஆட்டத்தின் 1 – 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.

இந்த சீசன் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிற மும்பை சிட்டி அணியானது இதுவரை ஆடிய 12 ஆட்டங்களில் 5 வெற்றி, 3 டிரா, மற்றும் 4 தோல்விகளை சந்தித்துள்ளது.எ.டி.கே மோகன் பாகன் இதுவரை ஆடிய 11 ஆட்டங்களில் 5 வெற்றி,4 டிரா, மற்றும் 2 தோல்விகளையும் சந்தித்துள்ளது.

நேற்று ஆட்டம் தொடங்கியதும் இரு அணிகளும் தொடர்ச்சியாக கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.இதன் பலனாக ஆட்டத்தின் 9 நிமிடத்தில் எ.டி.கே அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டேவிட் வில்லியம்ஸ் ஒரு கோல் அடித்தார்.பின்னர் ஆட்டத்தின் 24 நிமிடத்தில் மும்பை அணியின் வீரர் பிபின் அடித்த பந்து எ.டி.கே அணிவிரர் பிரித்தம் கோடல் கால்களில் பட்டு ஓன் கோலாக மாறியது.

இரண்டம் பாதியில் மீண்டும் இரு அணிகளும் மாறி மாறி கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.ஆனால் இரு அணிகளாலும் கடைசி வரை கோல் ஏதும் அடிக்கமுடியவில்லை.எனவே போட்டி நேர முடிவில் 1- 1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…