கோல் மழை பொழிந்த ஹைதராபாத் அணி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி சீசன் 8 -ன் நேற்றைய ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் முதல் இடத்திலுள்ள ஹைதராபாத் எப்.சி -யும் மற்றும் புள்ளிபட்டியலில் கடைநிலையில் உள்ள நார்த் ஈஸ்ட் அணியும் மோதினர்.ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹைதராபாத் எப்.சி 5 – 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த சீசன் தொடக்கம் முதலே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹைதராபாத் எப்.சி அணியினர் இதுவரை ஆடிய 13 ஆட்டங்களில் 7 வெற்றி, 2 டிரா மற்றும் 2 தோல்விகளையும் சந்தித்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.நார்த் ஈஸ்ட் அணியானது இதுவரை சந்தித்த 14 ஆட்டங்களில் 2 வெற்றி 4 டிரா மற்றும் 9 தோல்விகளை சந்தித்து புள்ளிபட்டியலில் 10 இடத்தில் உள்ளது.

போட்டி தொடங்கிய முதல் சிறப்பான ஆட்டத்தை விளையாடிய ஹைதராபாத் எப்.சி வீரர்கள் ஆட்டம் முழுவதும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர்.ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்தில் ஹைதராபாத் எப்.சி அணியின் நட்சத்திர வீரர் ogbeche தனது முதல் கோல் அடித்தார்.பின்னர் முதல் பாதியின் கூடுதல் நேரத்தை பயன்படுத்தி ஆகாஷ் மிஸ்ரா 45+3’ நிமிடத்தில் கோல் அடித்தார்.

இரண்டாம் பாதியின் தொடக்கம் முதல் கோல் அடிக்கும் முயற்சியில் களம் இறங்கிய நார்த் ஈஸ்ட் அணியினால் தனது முயற்சிகளை கோலாக மாற்ற முடியவில்லை.ஆட்டத்தின் 72’ நிமிடத்தில் சுஹிர் அடித்த கோல் ஆப் சைடு என்று அறிவிக்கப்பட்டது.பின்னர் இரண்டாம் பாதியிலும் ஹைதராபாத் எப்.சி வீரர்கள் தங்கள் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர்.ஒபெசே 60’ நிமிடத்தில் மீண்டும் தனது இரண்டாவது கோல் அடித்தார் . நிக்கில் பூஜாரி 84’ நிமிடத்திலும் எடு கார்ஸியா 88’ நிமிடத்திலும் கோல் அடித்தனர்.ஆட்டத்தின் முடிவில் 5 – 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…