6-வது வெற்றியை ருசித்த கொல்கத்தா!

14வது ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்றிரவு துபாயில் அரங்கேறிய 49-லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐதராபாத் சன்ரைசர்சை சந்தித்தது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி கொல்கத்தாவின் துல்லியமான பந்துவீச்சு தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தள்ளாடியது. 2-வது பந்திலேயே சாஹாவின் விக்கெட்டை பறிகொடுத்த ஹைதராபாத் அணி துரிதமாக ரன் எடுக்க முடியாமல் திணறியது. நட்சத்திர வீரர்கள் ஜாசன் ராய் 10 ரன்னிலும், கேப்டன் கேன் வில்லியம்சன் 26 ரன்னிலும் நடையைக் கட்டினார். அப்துல் சமத் கொஞ்சம் அதிரடியாக விளையாடினார். 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுக்கு 115 ரன்னில் முடங்கியது.
இந்த சீசனில் அந்த அணியின் மோசமான ஸ்கோர் இதுதான். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தடுமாறி தான் விளையாடினர். ஆனால் அவர்கள் இலக்கை அடைந்தனர். 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மான்கில் 57 ரன்களும், நிதிஷ் 25 ரன்களும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களும் எடுத்தனர். வெங்கடேச ஐயர் 8 ரணில் கேட்ச் ஆனார்.6-வது வெற்றி பெற்ற கொல்கத்தா அணி அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. மேலும் ஐதராபாத் அணிக்கு இது தொடர்ந்து பத்தாவது தோல்வியாகும்