ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுத்த ஐதராபாத் அணி!

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாய் நேற்று இரவு நடந்த 20-ஓவர் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-ஐதரபாத் அணிகள் மோதின.
ராஜஸ்தான் அணியினர் காயம் காரணமாக கார்த்திக் தியாகி, டேவிட் மில்லர் மற்றும் ஷம்சி நீக்கப்பட்டனர். அவர்களுக்கு மாற்றாக கிரிஸ் மோரிஸ், ஜெய்தேவ் உனட்கட், இவின் லீவிஸ் ஆகியோர் இடம் பிடித்தனர். ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர், மணீஷ் பாண்டே, பதிலாக கேதர் ஜாதவ் காயமடைந்த கலீல் அகமது ஆகியோருக்கு பதிலாக ஜாசன் ராய், அபிஷேக் ஷர்மா, பிரியம் கார்க், சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டனர்.
20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. இரண்டு முறை ‘கேட்ச்’ கண்டத்தில் இருந்து தப்பிய மஹிபால் லோம்ரோர் 29 ரன்னுடன், ராகுல் தியா ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். ஹைதராபாத் அணி தரப்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டும், சந்தீப் சர்மா, புவனேஷ்வர்க்குமார், ரஷித்கான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாசன் ராய், விருத்திமான் சஹா ஆகியோர் கலம் கண்டனர்.
அடுத்து களமிறங்கிய பிரியம் கர்க் வந்த வேகத்திலேயே ஏமாற்றம் அளித்தார். இதைத்தொடர்ந்து அபிஷேக் சர்மா, கேப்டன் கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.