பாரா ஒலிம்பிக்கில் வரலாறு படைப்போம்!

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் வருகிற 24-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் 54 பேர் கொண்ட இந்திய அணி 9 வகையான விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளது. நடப்பு சாம்பியன் தேவேந்திர ஜஜாரிய , தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன், உலக சாம்பியன் சந்தீப் சவுத்ரி ஆகியோருக்கு பதக்கம் வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது. இவர்களை வாழ்த்தி வழியனுப்பும் பதமான நிகழ்ச்சி காணொளி மூலம் நேற்று நடத்தப்பட்டது. இதில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் பேசுகையில் ‘நமது பாரா ஒலிம்பிக் வீரர்களின் லட்சியமும், தன்னம்பிக்கையும் 130 கோடி இந்தியர்களுக்கு உந்து சக்தி அளிக்கிறது. அவர்களின் துணிச்சலுக்கு முன்பு மிகப்பெரிய சவால்கள் எல்லாம் ஒன்றும் இல்லை. கடந்த பாரா ஒலிம்பிக்கை விட இந்த முறை பங்கேற்போர் இன் எண்ணிக்கை 3 மடங்கு அதிகம். உங்களது திறமை மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். கடந்து ஒலிம்பிக்கை விட இந்த முறை மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டார்.
ரியோ பாரா ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற வரும், இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவருமான தீபக் மாலிக் கூறுகையில், ‘இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 54 வீரர்களில் குறைந்தது 24 பேர் தரவரிசையில் டாப் 3 இடங்களில் உள்ளனர். எனவே நாங்கள் மிகவும் வலுவான அணியாக இருக்கிறோம். நிச்சயம் இந்த முறை முன்பை விட அதிக பதக்கங்களை வென்று வரலாற்று படைப்போம் என்று நம்புகிறேன். இந்த வீரர்களுடன் சங்க தலைவர் என்ற முறையில் இணைந்து கடினமாக உழைத்து இருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது பெருமையாக கருதுகிறேன்’ என்றார்.