பிஎஸ்ஜி அணியுடன் லயோனல் மெஸ்சி 2 வருடம் ஒப்பந்தம்!

கால்பந்து போட்டியில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி கருதப்படுகிறார். இவர் ஆரம்ப காலத்தில் இருந்து ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். ஒரே கிளப்பிற்கான அதிக கோல் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.நிதி மற்றும் கட்டமைப்பு பிரச்சனை தொடர்பாக மெஸ்சியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க முடியவில்லை என பார்சிலோனா அணி அறிவிப்பு வெளியிட்டது. இதனால் பார்சிலோனா அணியில் இருந்து மெஸ்சி அதிகாரப்பூர்வமாக வெளியேறினார்.
இந்த நிலையில் 34 வயதான மெஸ்சி, இரண்டு வருடத்திற்கான ஒப்பந்தம் தொடர்பான தகவலை பிஎஸ்ஜி யிடம் இன்று பெற்றுள்ளார். இதனால் பிரான்சின் தலைசிறந்த கிளப் அணியான பிஎஸ்ஜி அணியுடன் இரண்டு வருடம் விளையாட ஒப்பந்தம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மேலும் இரண்டு கிளப் அணிகள் மெஸ்சியை ஒப்பந்தும் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது.