400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணிக்கு 9-வது இடம்!

ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடந்த ஆண்களுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் 16 அணிகள் பங்கேற்றன. இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு நடந்த தகுதி சுற்று முடிவு ‘டாப் 8’ அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறின. 8 அணிகள் கலந்து கொண்ட தனது பிரிவில் இந்திய அணி 4வது இடம் பிடித்தது. ஒட்டுமொத்தத்தில் 9வது இடம் பெற்று மயிரிழையில் இறுதிச்சுற்றுக்கு தகுதி காணும் வாய்ப்பை இறந்தது. இருப்பினும் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய இந்திய அணி பந்தய தூரத்தை 3 நிமிடம் 25 வினாடியில் கடந்து புதிய ஆசிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் கத்தார் அணி 3 நிமிடம் 56 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.

பெண்களுக்கான 20 கிலோமீட்டர் தூர நடை பந்தயத்தில் 58 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்திய வீராங்கனைகள் பிரியங்கா கோஸ்வாமி 17-வது இடத்தையும் பாவனா ஜாட் 32-வது இடத்தையும் பிடித்தது ஏமாற்றம் அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *