வினேஷ் போகத் அதிர்ச்சித் தோல்வி!

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத்தின் கனவு கால் இறுதியுடன் தகர்ந்து போனது. இதன் 53 கிலோ எடைப்பிரிவில் முதல் சுற்றில் 7-1 என்ற புள்ளி கணக்கில் 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான ஸ்வீடனின் சோபியா மேக்டலினாவை சாய்த்த வினேஷ் போகத், காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனான வனேசா கலாட்ஜின்ஸ்காவை சந்தித்தார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வனேசா, வினேஷ் போகத்தை நிமிர விடாமல் மடக்கி வெற்றிக்கனியை படித்தார். வினேஷ் 3-9 என்ற கணக்கில் பணிந்தார். மல்லித்தழை பொருத்தவரை ஒரு வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேறும் போது அவரிடம தொடக்க ரவுண்டு களில் விழுந்தவர்களுக்கு ‘ரெபிசாஜ்’ மூலம் மறு வாய்ப்பு வழங்கப்படும். ரெபிசாஜில் அதிகபட்சமாக வெண்கலம் வெல்ல முடியும். ஆனால் இந்த வகையிலும் வினேஷ் போவதற்கு அதிர்ஷ்டம் இல்லை. போகத்தை தோற்கடித்த வனேசா, அரையிறுதியில் தோற்றதால் வினேஷ் போகத்துக்கு ரெபிசாஜ் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பெண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக் ‘ ரெபிசாஜ்’ முதல் ரவுண்டில் ரஷ்யாவின் வளரியா கோப்லோவை கொண்டார். இதில் அன்ஷு மாலிக் 1-5 என்ற புள்ளி கணக்கில் தோற்று வெளியேறினார்.