வில்வித்தையில் இந்திய வீரர் தோல்வி!

டோக்கியோ ஒலிம்பிக்கின் வில்வித்தை போட்டியில் இன்று காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் அடானு தாஸ், ஜப்பான் வீரர் டகாஹாரு பருகவா ஆகியோர் மோதினர்.
இதில் அடானு தாஸ் 25-27, 28-28, 28-27, 28-28, 26-27 என்ற கணக்கில் இழந்தார். இதன்மூலம் பருகவா டகாஹாரு 6-4 என்ற கணக்கில் அடானு தாசை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது.