வெள்ளிப்பதக்கம் வென்று நாடு திரும்பிய மீரா பாய் சானு!

வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு “பாரத் மாதா கி ஜெய்” என்ற கோஷங்களுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. மீராபாய் சானு ஒலிம்பிக்கின் முதல் நாளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார், கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு பளுதூக்குதலில் பதக்கம் வென்ற இரண்டாவது வீராங்கனை ஆவார்.
மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு பாதுகாப்புப் படையினரால் விமான நிலையத்திற்கு வெளியே அழைத்துச் வரப்பட்டார். மேலும் அவர் செய்யதியாளரிடம், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கம் வென்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் மணிப்பூரைச் சேர்ந்தவர் அல்ல, நான் முழு நாட்டையும் சேர்ந்தவர் என்று கூறினார்.
இந்த நிலையில் மீராபாய் சானு பங்கு பெற்ற பிரிவில் தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டது உறுதியானால் அவரது பதக்கம் பறிக்கப்படும் அடுத்த இடத்தில் இருக்கும் மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.