சேப்பாக் சூப்பர் கில்லீஸ் திருப்பூர் தமிழன்ஸ் இன்று மோதல்!

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எம்எஸ் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வரும் ஐந்தாவது தமிழ்நாடு பிரிமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ளது . இரண்டாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
வலுவான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சவாலை சமாளிப்பது திருப்பூர் தமிழன் அணிக்கு கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு ஏழரை மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.