பாய்மரப்படகு போட்டிக்கு தகுதி பெற்ற முத்ல் இந்திய வீராங்கனை!

ஒலிம்பிக் பாய்மரப்படகு போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை தனதாக்கி இருப்பவர் சென்னையை சேர்ந்த நேத்ரா. எஸ்ஆர்எம் பல்கலைக் கழக இன்ஜினியரிங் மாணவியான அவர் லேசர் ரேடியல் தனிநபர் பிரிவில் கலந்து கொள்கிறார் . கூடைப்பந்து, டென்னிஸ், நீச்சல் உள்பட பல போட்டிகளில் தொடக்கத்தில் கவனம் செலுத்திய நேத்ரா, 2011 ஆம் ஆண்டில் கோடைகால பயிற்சி முகாம் மூலம் பாய்மரப்படகு பயிற்சியைத் தொடங்கினார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஓமனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தகுதி சுற்றானா முசானா சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்த நேத்ர, ஜனவரி மாதம் அமெரிக்காவில் நடந்த உலக கோப்பை போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று வியக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறப்பு வழக்கை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி…

ஒப்பந்த செவிலியர்களை பணி நீக்கம் செய்த என்எல்சி மருத்துவமனை கண்டித்து போராட்டம்

நெய்வேலி என்எல்சி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய உதவி செவிலியர்களை பணி நீக்கம்…