வாள்வீச்சில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பவானி, வாள் வீச்சில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சிறப்புடன் களமிறங்குகிறார். தனது 11 வயதில் கையில் வாள் ஏந்தி அவர், சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். இவர் எளிதில் இந்த உயரத்தை எட்டவில்லை. 37 வயதான பவானிதேவி தற்போது மின்சார வாரியத்தில் பணி ஆற்றுகிறார். கேரளாவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் தனது திறமையை கூர்தீட்டிய பவானி தேவி 2017 ஆம் ஆண்டு அயர்லாந்தில் நடந்த பெண்கள் உலக கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் சீனியர் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று சரித்திரம் படைத்தார். தற்போது பவானி தேவிக்கு ஊக்குவிக்கும் வகையில் அவருடைய பந்தயத்தை நேரில் காண அவரது தாயாரும் டோக்கியோ செல்கிறார்.first in