எளிதில் வெற்றிபெற்ற வங்காளதேசம் அணி!

வங்காளதேசம், ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹரோரியில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த ஜிம்பாப்வே அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்பின் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 276 ரன்கள் சேர்த்தது. 4வது சதம் அடித்து லிட்டான் தாஸ் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜிம்பாப்வே தரப்பில் லுக் ஜோவிங் மூன்று விக்கெட்டும் ரிச்சர்ட் நரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி வங்காள தேச வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 28.5 ஓவர்களில் 121 ரன்னில் சுருண்டது. இதனால் வங்காளதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.