திருச்சி அணி வீரர்கள் விலகல்!

8 அணிகள் பங்கேற்கும் ஐந்தாவது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 19ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.
இந்தப் போட்டிக்காக அனைவரும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்தப் போட்டிக்கான திருச்சி வாரியர்ஸ் அணி வீரர் முரளிவிஜய், அனுராதா ஸ்ரீகாந்த் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக இந்த போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கின்றனர்.
இருவரும் கடந்த சீசனில் இந்த அணிக்கு தலைமை தாங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அவர்களுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் வருண் கோத்தாரி, இளம் பேட்ஸ்மேன் கேசவ் கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.