பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி!

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 332 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து பாகிஸ்தான் இடையே 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்தது. 14 வது சதத்தை பூர்த்தி செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 158 ரன்கள் விளாசினார். இங்கிலாந்துக்கு எதிராக 150 ரன்களுக்கு மேல் குவித்த முதல் கேப்டன் என்ற சிறப்பை பெற்றதோடு, 14 சதங்களை அதிவேகமாக எட்டியவர் என்ற சாதனையும் பாபர் அசாம் படைத்தார்.
அடுத்த மெகா இலக்கை நோக்கி அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணியில் சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்த ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 125 ரன்களுடன் தடுமாறியது. பின்பு 6வது விக்கெட்டுக்கு ஜேம்ஸ் வின்சும், லீவிஸ் கிரிகோரியன் இணைந்து அணியை காப்பாற்றினர்.
இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 332 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.