ஒளிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி காணொளி மூலம் வாழ்த்து!

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ஆம் தேதி தொடங்குகிறது.‘டோக்கியோ ஒலிம்பிக்’ போட்டியில் கலந்து கொள்வதற்காக 228 பேர் கொண்ட இந்திய அணி செல்கிறது. போட்டியாளர்களை காணொளி வாயிலாக பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாடி உற்சாகப்படுத்தினார். நேற்று நடந்த காணொளி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், சட்டத்துறை மந்திரி கிரண், ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா மற்றும் போட்டியாளர்களும், சிலரின் பெற்றோர்களும் இந்த காணொளி காட்சியில் கலந்து கொண்டனர்.
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்திரா கூறுகையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 119 வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 228 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இதில் 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் உள்ளனர். 85 போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அதிக எண்ணிக்கை கொண்ட இந்திய அணி இதுதான். இந்திய அணியின் முதல் குழு வருகிற 17-ஆம் தேதி டோக்கியோ புறப்பட்டு செல்கிறது. குழுவில் வீரர்கள், அதிகாரிகள் என மொத்தம் 90 பேர் இடம் பெறுவார்கள் என்றார்.