இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மாரடைப்பால் மரணம்!.

1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை முதல் முறையாக வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருந்த முன்னாள் வீரர் யாஷ்பால் சர்மா நேற்று மாரடைப்பால் காலமானார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மிடில் ஆடர் பேட்ஸ்மேன், 1983 ஆம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியில் அணிவகுத்த வருமான ஷர்மா டெல்லியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் நடைப் பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய யாஷ்பால் ஷர்மா வீட்டில் திடீரென நெஞ்சு வலியால் மயங்கி சரிந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்தது. மரணமடைந்த சர்மாவுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.