“ஆறாவது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன்ஷிப் பெற்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச்”

உலகப் புகழ்பெற்ற விம்பிள்டன்-2021 ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி நேற்று இங்கிலாந்து-நடைபெற்றது.
இப்போட்டியில் ஜோகோவிச் மற்றும் மெட்யோ பெரெட்டி மோதினர்.
ஜோகோவிச் ஏற்கனவே பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலியா போன்ற கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றவர். இப்போது விம்பிள்டன் இறுதி சுற்றில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யுஎஸ் ஓபன் போட்டியிலும் கலந்து வெற்றி பெற்றால் ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றவர் என்ற பெருமை வந்து சேரும்.
இறுதிப்போட்டியில் இத்தாலியின் பெரெட்டினியை 6-7,6-4,6-4,6-3 என்ற செட்டில் மெட்யோ பெரெட்டியை தோற்கடித்தார் ஜோகோவிச்.
இந்நிலையில் ரோஜர் ஃபெடரர் , ரஃபேல் நடால் இவர்களின் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் பெற்றவர்கள் என்ற சாதனையை சமன் செய்தார் ஜோகோவிச்.