” சி.எஸ்.கே அணிக்காக மட்டுமே விளையாட விரும்புகிறேன்”-ரெய்னா!

மகேந்திர சிங் டோனிக்கும் சுரேஷ் ரெய்னாவுக்கும் இருக்கும் நட்பு அனைவரும் அறிந்த ஒன்று. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டோனி தன்னுடைய ஓய்வை தெரிவித்ததும் ரெய்னாவும் தன்னுடைய ஓய்வை அறிவித்து இர்ருந்தார். இந்த ஒரு சம்பவம் இவர்களின் நட்பின் ஆழத்தை உணர்த்தியது. இவர்கள் இருவருமே ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றனர்.சென்னை ரசிகர்கள் டோனியை தல என்றும் ரெய்னாவை சின்ன தல என்று அழைத்து தங்களது அன்பை வெளிப்படுதுகிறார்கள்.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள தொடர்கள் கூடிய விரைவில் நடக்கவிருக்கின்றன. இதனிடையில் அடுத்த ஐபிஎல் சீசனில் அணிகள் எந்த வீரரை தக்கவைக்கும். யார் விடுவிக்கப்படுவார்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது. அடுத்த தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்படவுள்ளது. தோனி சிஎஸ்கே அணிக்காக அடுத்தாண்டு விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்நிலையில் தோனி ஆடவில்லை என்றால் நானும் ஆடமாட்டேன் என ரெய்னா கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள ரெய்னா, “ என்னால் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் இன்னும் எஞ்சியுள்ளது. அடுத்த தொடரில் மேலும் 2 அணிகள் உதயமாகவுள்ளன. நான் சென்னை அணிக்காக மட்டுமே விளையாடுவேன். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என நம்புகிறேன்.

தோனி அடுத்த சீசனில் விளையாடவில்லை என்றால் நானும் விளையாடமாட்டேன். நாங்கள் இருவரும் 2008-ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறோம். இந்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் நாங்கள் வென்றால் அடுத்தாண்டு தோனி விளையாட நான் அவரை சமாதானப்படுத்துவேன்’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாடு அமைதியை குழைக்கும்  சீமான் மீது போலீசில் வழக்கறிஞர் புகார் 

திருச்சி மாவட்டம், மணப்பாறை டிஎஸ்பி ராமநாதனிடம், அரசு வழக்கறிஞர் முரளிகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், …

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றம்… சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் பட்ஜெட் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது என கரூர்…