கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் அசத்தலாக வென்றது அர்ஜென்டினா!

தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கான 47வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்றது.

இப்போட்டியில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டன. இ தில் அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

இறுதி சுற்றின் முதல் பாகத்தில் , முதல் இருபது நிமிடங்களில் இரு அணிகளும் ஒரு கோல் கூட போடவில்லை. பின்பு அர்ஜெண்டினாவின் வீரர் ஏஞ்சல் டி மரியா சரியாக ஆட்டத்தின் 22 ஆவது நிமிடத்தில் முதல் கோல் போட்டு அணிக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால் பிரேசில் அணியிலிருந்து ஒரு கோல் கூட முதல் பாதியில் வரவில்லை. இந்நிலையில் முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

சுற்றின் இரண்டாம் பாதியில் பிரேசில் என்ன தான் கோல் போட முயன்றாலும் அர்ஜென்டினா மிக சிறப்பாக தடுப்பாட்டம் ஆடியது. அதனால் பிரேசில் அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இதையொட்டி இறுதிச்சுற்றில் ஆக்ரோஷமாக ஆடி 1-0 என்ற கணக்கில் சாம்பியன்ஷிப் வென்றது அர்ஜென்டினா.

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இதுவரை 29 முறை அமெரிக்க கோபாவில் கலந்துகொண்டு விளையாடி 15 முறை கோப்பையை கைப்பற்றியது. ககோ பா கோப்பையை அதிக முறை வென்ற உருகுவேயின் சாதனையை அர்ஜென்டினா இம்முறை சமன் செய்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *