விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச் !

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் தொடர் விம்பிள்டன் இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றது.
நேற்று இந்த தொடருக்கான அரையிறுதி போட்டிகள் நடைபெற்றது. இதில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச்சும் கனடாவை சேர்ந்த ஷபோவலோவும் மோதினர். இதில் நோவக் ஜோகோவிச் 7-6 ,7-5, 7-5 என்ற கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இவர் ஏற்கனவே பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலியா போன்ற கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றவர். இப்போது விம்பிள்டன் இறுதி சுற்றில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யுஎஸ் ஓபன் போட்டியிலும் கலந்து வெற்றி பெற்றால் ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்றவர் என்ற பெருமை வந்து சேரும்.