ஆஸ்திரேலியாவை அதிரவைத்த ரஸல்… முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ் !

முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 65 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.ரஸல் களம் இறங்கிய பின்னர் 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் அடங்கியுள்ளது. மொத்தம் வெஸ்ட் இண்டீஸ் அணி 145 ரன்கள் எடுத்தது.
இதனை அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா முதலில் நன்றாக விளையாடி 33 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தது. ஆனால் மெக்காய் மற்றும் ஹே டன் பந்து வீச்சால் கடைசி 19 ரன்களில் 6 விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலியாவிலிருந்து 127 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. இதையொட்டி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை வகிக்கிறது