ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த தீபிகா குமாரி!

பிரான்ஸ் தலைநகரான பாரிசில் உலக கோப்பை வில்வித்தைப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்குபெற்று தீபிகா குமாரி 3 தங்கப் பதக்கங்களை வென்று குவித்துள்ளார்.
ஒற்றையர், மகளிர் மற்றும் கலப்பு அணி என மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்று அசத்தியுள்ளார் தீபிகா குமாரி.
இதன் மூலம் சர்வதேச அரங்கில் வில்வித்தைப் போட்டியில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அவர் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
உங்களது அன்பிற்கும், ஆசீர்வாதத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என அவர் தெரிவித்துள்ளார்.