ஐபிஎல் போட்டிகளின் தேதி அறிவிப்பு

இந்தியாவில், கொரோனா காலத்திலும் 14 ஆவது ஐபிஎல் தொடர் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் நடைபெற்று வந்தது.
ஐபிஎல் தொடரின் 29 போட்டிகள் நடைபெற்று முடிந்திருந்த நிலையில், தொடரில் பங்கேற்ற வீரர்கள் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனால், தேதி குறிப்பிடப்படாமல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பு குறையாததால், தொடரின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து நடந்த பிசிசிஐ முடிவு செய்தது.
அதன்படி, செப்டம்பர் முதல் அக்டோபர் மாதத்தில் போட்டிகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், தேதி குறிப்பிடப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை ஐபிஎல் டி20 தொடரின் எஞ்சிய 31 போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.