விளையாட்டுத் துறையை புறக்கணிக்க முடியாது…பி.டி. உஷா கோரிக்கை
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல் அதிகமாக இருக்கும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்று தான் தீர்வு என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், தேசிய மற்றும் பிற போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவி நிர்வாகிகள் மற்றும் மருத்துவக் குழுவுக்கு கரோனா தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில், “வரவிருக்கும் தேசிய மற்றும் பிற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவிருக்கும் விளையாட்டு வீரர்கள், அவர்களது பயிற்சியாளர்கள், உதவி நிர்வாகிகள் மற்றும் மருத்துவக் குழுவுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கேரள முதல்வருக்கு தாழ்மையான வேண்டுகோள். விளையாட்டுத் துறையை நாம் புறக்கணித்துவிட முடியாது” என பதிவிட்டுள்ளார்.