ஆசிய குத்துச்சண்டை போட்டியில் அதிக பதக்கத்தை வென்ற இந்தியா
ஆசிய குத்துச்சண்டை போட்டி. தலைநகர் டெல்லியில் மே 21 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக போட்டிகள் அனைத்தும் துபாய்க்கு மாற்றப்பட்டது.
ஆடவர் 91 கிலோ பிரிவின் இறுதிச்சுற்றில் 2016 ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்ற கஸகஸ்தானின் வாஸ்ஸில்லி லெவிட்டை 4-1 என்கிற புள்ளிக் கணக்கில் தோற்கடித்து இந்தியாவின் சஞ்சீத் தங்கம் வென்றுள்ளார்.
மேலும், டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்தியாவின் பூஜா ராணி, மகளிர் 75 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.
இதன்மூலம், இதையடுத்து ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணி இரு தங்கங்கள் உள்பட 15 பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் 13 பதங்களைக் கைப்பற்றிய இந்தியா இந்த முறை அதிக பதக்கங்களை வென்றுள்ளது.