ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப தனி விமானமா?

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையிலும், ஐ.பி.எல் போட்டிகள் உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற பல வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகிய நிலையில் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.
கொரோனா பாதிப்பால் இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு பல நாடுகளும் தடை விதித்துள்ளது. அந்த வகையில், ஆஸ்திரேலியாவும் மே 15 ஆம் தேதி வரை இந்தியாவுடனான விமான சேவைக்கு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்புவது எப்படி என்ற கேள்வி வந்தது. ஐபிஎல் வீரர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் வாரியம் கவனித்துக்கொள்ளும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, வீரர்கள் நாடு திரும்புவதற்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்வது பரிசீலனையில் இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் டோட் கிரீன்பெர்க் தெரிவித்துள்ளார்.