நடராஜனுக்கு வெற்றிகரமாக அறுவைச்சிகிச்சை முடிந்தது!
இந்தியாவில், 14 ஆவது ஐ.பி.எல் தொடர், கொரோனா காலத்திலும் உரிய பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டு வருகிறது.
இதில், ஹைதராபாத் அணிக்காக நடராஜன் விளையாடி வந்தார். இந்நிலையில், அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், காயத்தின் தாக்கம் அதிகமாக இருக்கவே சிகிச்சை பெறுவதற்காக நடராஜன் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து, தனக்கு முழங்கால் அறுவைச்சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.