இந்தியா என்னோட இரண்டாவது வீடு… உதவிக்கரம் நீட்டும் மூத்த கிரிக்கெட் வீரர்!

இந்தியா கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த பலரும் முன்வந்துள்ளனர்.
இதில் சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பாட் கம்மின்ஸ் இந்தியாவி்ற்கு ரூ.37 லட்சம் நிதி உதவி அளித்திருந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தனது பங்கிற்கு ரூ.41 லட்சத்தை ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்குவதற்காக கொடுத்துள்ளார். மேலும், இந்தியா தனது இரண்டாவது வீடு எனவும் அந்த இரண்டாவது வீடு கொரோனாவுடன் போராடிக் கொண்டிருப்பது மனதிற்கு வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.