இது பஞ்சாபா?இல்ல ஆர்சிபியா? பஞ்சாபின் புதிய ஜெர்சியால் குழம்பிய ரசிகர்கள்!

ஐபிஎல் 14-வது சீசன் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாபும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.இந்த போட்டியில் பஞ்சாப் த்ரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணி தங்களது அணியின் பெயரை பஞ்சாப் கிங்ஸ் என மாற்றம் செய்து களமிறங்கியது.மேலும் அவர்களது ஜெர்சியையும் புதிதாக மாற்றியுள்ளனர்.அந்த புதிய ஜெர்சி ஆர்சிபி-யின் ஜெர்சி போல இருப்பதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஆர்சிபிக்கு உங்களை வரவேற்கிறேன் என ராகுலையும் கெயிலையும் குறிப்பிட்டு சஹால் கிண்டலாக செய்துள்ள ட்வீட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
ராகுல் மற்றும் கெயில் இருவருமே இதற்கு முன் பெங்களூருவிற்காக ஆடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.