சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ஐபிஎல் 14-வது சீசன் கடந்த ஏப்ரல் 9 முதல் தொடங்கியுள்ளது.நேற்று மும்பை வான்கடே மைதானாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
டாஸ் ஜெயித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பீல்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து களமிறங்கிய தொடக்கத்தில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியது.
பவர் பிளே முடிவிற்கு சுரேஷ் ரெய்னா அதிரடி காட்டத் தொடங்கினார்.இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.சுட்டிக் குழந்தை சாம் கரண் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார்.இதன் மூலம் சென்னை அணி 20 ஓவரின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.இதன் மூலம் டெல்லி அணி சென்னை அணியை எளிதில் வென்றது.
இந்த ஆட்டத்தின் போது சிஎஸ்கே கேப்டன் தோனி பந்து வீசுவற்கு அதிகமாக நேரம் எடுத்துக்கொண்டார்.அதனால் அவருக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
முதல் போட்டியில் தோல்வியடைந்த சென்னை அணி வருகிற ஏப்ரல் 16-ல் நடைபெற உள்ள இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்போடு பயிற்சி மேற்கொண்டு வருகிறது.