முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய பெங்களூரு அணி!
![](https://thenewslite.com/wp-content/uploads/2021/04/abdandkohli1-1601320248.jpg)
இந்தியாவில் ஆண்டுதோறும் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் இருந்தாலும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நேற்று முதல் 14 ஆவது ஐ.பி.எல் திருவிழா தொடங்கியுள்ளது.
முதல் போட்டியில், கடந்த வருட சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு அணியும் பலப்பரீட்ச்சை நடத்தியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.
பெங்களூரு அணி சார்பில் ஹர்சல் பட்டேல் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை எடுத்ததால் மும்பை அணியால் 20 ஓவர்களுக்கு 158 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
பெங்களூரு அணிக்கு முன்னணி வீரர்கள் சிறப்பாக செயல்பட தவறியதால், வழக்கம் போல மொத்த பாரமும் டிவிலியர்ஸ் தலையில் விழுந்தது. அவரின் கடைசி நேர அதிரடி ஆட்டத்தால் பெங்களூரு அணி, தொடரின் முதல் போட்டியை வென்று வெற்றியுடன் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது.