புதிய விளம்பரத்தில் ஆச்சர்யப்படுத்தும் டிராவிட்!

இந்தியாவின் தடுப்புச்சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட் கிரெடிட் கார்டு கட்டணங்களை செலுத்தும் கிரெட் நிறுவனத்தின் புதிய விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.அந்த விளம்பரத்தில் அவர் கோபமாக பேசி நடித்துள்ளார்.இது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உட்பட பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த விளம்பர படத்தை விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.அமைதியாக இருக்கும் ராகுல் டிராவிட்டை மட்டுமே பார்த்த பலருக்கும் இந்த வீடியோ ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.