சச்சின் மருத்துவமனையில் அனுமதி!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா அதிகமாக காணப்பட்டது.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது, இதனால், தன்னை வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று மருத்துவர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். இன்னும் சில நாட்களில் தொற்று பாதிப்பு குணமடைந்து வீடு திரும்புவேன் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
மேலும், உலகக்கோப்பையை நாம் வென்று இன்று பத்தாண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.