மூத்தகிரிக்கெட் வீரர்களுக்கு பரவும் கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்று மறுபடியும் உச்சம் பெற்று வருகிறது. தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் பரப்புரைக்குச் செல்லும் அரசியல்வாதிகளுக்கு கொரோனா தொற்று அதிகம் ஏற்படுகிறது.

இதனையடுத்து, மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. அண்மையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினுக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து, மூத்த வீரர் யூசுப்பதானுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், அவரும் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளார்.

யூசுப்பதானைத் தொடர்ந்து, அவரது சகோதரர் இர்ஃபான் பதானுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. மற்றொரு மூத்த வீரர் பத்ரிநாத்துக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *