இந்திய மகளிர் டி20 கேப்டன் ஹர்மன்ப்ரீத்க்கு கொரோனா தொற்று உறுதி
பஞ்சாப்பைச் சேர்ந்த 32 வயது ஹர்மன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றிருந்தார். அடுத்து, நடைபெற்ற டி20 தொடரில் காயம் காரணமாக அவர் பங்கேற்கவில்லை.
ஆனால், அவருக்கு நான்கு நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால், கொரோனா பரிசோதனை செய்து கொண்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கா தொடரில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்து கொண்ட பின் தான் விளையாட அனுமதிக்கப்பட்டார்.
இதனால், அவருக்கு அந்தத் தொடர் முடிந்த பின்பு தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என தெரிகிறது. இதனையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தியுள்ளார்.