இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதமடித்த ராகுல்!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான தவானும், ரோஹித்தும் சொர்ப்ப ரன்களில் வெளியேறியது. அதன் பின், கோலி – ராகுல் ஜோடி இணைந்தது.

இதில், கோலி 66 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து அதிரடி காட்டிய ராகுல் சதமடித்து அசத்தியுள்ளார். ஆனாலும், 108 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார். தற்போது, இந்திய அணி 45.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்களுடன் விளையாடி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *